ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருகுணுகலா மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ரத்மலான பகுதியில் வைத்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.