
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளராக சித்ராஞ்சலி திசாநாயக்க நியமனம்
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் புதிய பணிப்பாளராக சித்ராஞ்சலி திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒகஸ்ட் 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது
சித்ராஞ்சலி 34 ஆண்டு காலமாக கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல், சந்தை மேம்பாடு, தயாரிப்பு மேலாண்மை, தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகிய பிரிவுகளில் சேவையாற்றி வந்துள்ளார்.
1986ஆம் ஆண்டில் இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையில் ஆராய்ச்சி உதவியாளராக சேவையில் இணைந்த அவர் ஏற்றுமதி மேம்பாடு குறித்த அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.