சுப்பிரமணியம் சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ள மகிந்த

சுப்பிரமணியம் சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ள மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதவியேற்பு நிகழ்வில் நாளை கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

எனினும் கொரோனா வைரஸ் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாக என்னால் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது எனினும் எதிர்காலத்தில் நான் அங்கு செல்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.