நாடாளுமன்றத் தேர்தலுக்காக சொந்த ஊர் சென்றவர்களுக்கு சிறப்புத் தகவல்
நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்குச் சென்றவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் நாளை காலை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றவர்கள் கொழும்பிற்குத் திரும்புவதற்காக நாளை காலை முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப் படவுள்ளன.
நேர அட்டவணைக்கு இணங்க சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக நாளை மற்றும் நாளை மறு தினங்களில் மேலும் 100 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிகளவு மக்கள் வருகை தரக்கூடும் என எதிர் பார்க்கப்படும் நகர் பகுதிகளுக்குக் கொழும்பில் இருந்து பஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பயணங்களில் ஈடுபடுமாறு பொது மக்கள் மற்றும் பஸ் ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமுல்படுத்தப்படும் விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் பத்தாம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் திலான் மிருண்டா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.