
நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொவிட் 19 தொற்றுறுதியான மேலும் 2 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட இரண்டு பேரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 254 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.