
திருகோணமலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
திருகோணமலையில் வயலுக்கு சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் கோமரங்கடவல - கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய டி. நிலவீர என தெரியவருகிறது.
குறித்த நபர் வழமைபோன்று இன்று வயலுக்கு சென்ற போது குளவி கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து அவரை அயலவர்கள் மீட்டு மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.