பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து பொதுஜன முன்னணிக்கு வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து பொதுஜன முன்னணிக்கு வாழ்த்து

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற பொதுத்தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை பாகிஸ்தானுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநேரம், கொவிட்19 தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சியின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதாந்திர உறவு மேலும் வலுப்பெறும் என தான் நம்புவதாகவும்; இம்ரான்கான் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.