எதிர்பாராத விதமாக கைதான நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

எதிர்பாராத விதமாக கைதான நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தங்க மாலை ஒன்றை கொள்ளையடித்து அதை விழுங்கிய சந்தேக நபரொருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் தமயந்தி பெர்ணான்டோ முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் ஹிஜிராபுர பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் தங்க மாலையை கொள்ளையடிததுவிட்டு ஹட்டன் பௌத்த சங்கத்திற்கு செல்லும் வழியில் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் குறித்த நகை கொள்வனவு செய்யப்பட்ட நிலையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிங்கமலை புகையிரத சுரங்கப்பதை பகுதிக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன் போது அவரிடம் இருந்த தங்க மாலையை விழுங்கியுள்ளார். இதனையடுத்து அவர் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட X-ray பரிசோதனையில் அவர் தங்க மாலையை விழுங்கிய விடயம் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபரை நீதவான் தமயந்தி பெர்ணான்டோ முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, சந்தேக நபர் விழுங்கிய மாலையை சிறை மருத்துவரை கொண்டு வெளியே எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தவிட்டுள்ளார்.