வௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்

வௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுமென வௌியுறவு தொடர்பான ஜனாதிபதியின் ​மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இச்செயற்பாடுகள் மீள முன்னெடுக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக இந்தியா, டோஹா, கட்டார் மற்றும் மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் இன்றைய தினம் அழைத்து வரப்படவுள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைதீவில் 187 பேரும் மற்றும் டோஹா, கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இலங்கை வரகை தரவுள்ளமை குறிப்படத்தக்கது.