காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
காலி-கொழும்பு பிரதான வீதியின் கஹவ-தெல்வத்த இடையிலான கரையோர பகுதியில் கடலலை சீற்றம் காரணமாக கடலில் உள்ள மணல் உள்ளிட்ட கழிவுகள் வீதியில் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த வீதியின் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் வீதியில் நிறைந்துள்ள மணல் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் கடலோர பாதுகாப்பு திணைக்கள பிரிவினரும் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.