
வெற்றி பெற்ற பின் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையின் கீழ் புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் தனது வெற்றியை பதிவு செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனது மகத்தான வெற்றிக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அதே வேளையில், புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பணியாற்றுவேன் என்று கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை மற்றும் நாட்டில் அமைதியான தேர்தலை உறுதி செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார்.
பொலன்னறுவையில் 7ம் இலக்கத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட இவர் மாவட்ட விருப்பு வாக்குகளில் 111,137 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.