
வாக்களிப்பதற்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்தல்!
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக வேண்டிய போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து சபையின் ஊடாக இவ்வாறு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கென மேலதிகமான பேருந்து சேவைகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அதிகளவானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், எதிர்வரும் நாட்களில் தொழில்லகளுக்காக கொழும்புக்கு மீண்டும் வர ஆரம்பித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.