எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு காற்று மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேநேரம், நாட்டை சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்களும், கடல் தொழிலாளர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேநேரம், நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல மாகாணங்களில் சில பகுதியில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மரமொன்று முறிந்து வீழ்ந்தமை காரணமாக கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில், எஹலியகொட - நாமல்புர சந்தியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வழியை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்று காலை 8.50 அளவில் பாரிய மரம் ஒன்று வீதியில் முறிந்து வீழந்துள்ள நிலையில், அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.