தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்

தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) அன்று மாலை 5.45மணியளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள் | Girl Body Found Hanging From Cradle Bogawantalawa

  சிறுமியின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் இனங்கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்து கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13வயதுடைய மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த சிறுமி பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07ல் கல்வி கற்று வருவதாக தெரிவித்தனர். இதேவேளை தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபுது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்ற சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.