
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசந்த திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையக்கத்தின் களப் படைப் பிரிவின் பதில் கட்டளை அதிகாரியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான இடமாற்ற உத்தரவு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 13ம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் வழமையான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது ஏதேனும் விசேட தேவைகள் கருதி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.