
பெற்ற குழந்தைகளின் உயிரை பறித்த தாய் ; இறுதியில் எடுத்த விபரீத முடிவு
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் விஜயலெட்சுமி இவருக்கு திருமணமாகி பிரிண்டா (வயது 4) என்ற மகளும், புவன் (வயது 1) என்ற மகனும் இருந்தனர். விஜயலெட்சுமியின் கணவர் பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார்.
விஜயலெட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், விஜயலெட்சுமி மாலை தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயலெட்சுமி இந்த விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.