தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதில்லை -சஜித் பிரேமதாச

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதில்லை -சஜித் பிரேமதாச

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்;தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் 54 ஆசனங்களை பெற்றுக் கொடுத்த 27 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தேர்தலில் பின்னடவை சந்தித்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்க போதவதில்லை என கட்சியின் கொள்கை பிரகடனத்தில் முன்னரே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது.

எனவே, பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது நாட்டில் பாரிய அரசியல் ஜனநாயக புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த சந்திப்பில் இறுதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.