
பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன்!
நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் பாடசாலையொன்றின் மேல் மாடியிலிருந்து மாணவரொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவரே மாடியிலிருந்து இவ்வாறு விழுந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து மாணவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்த்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.