
வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி மாயம்; கணவர் முறைப்பாடு
வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார்.
எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் படத்தில் உள்ளவரை கண்டால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு 052 2277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 அந்த இலக்கங்களுக்கு அறிய தருமாறு கோர்க்கை விடுக்கப்பட்டுள்ளது.