சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

நாட்டின் சந்தைகளில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 3,000 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 200 ரூபாய் முதல் 300க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்பட்ட 1 கிலோகிராம் எலுமிச்சையின் விலை பல வாரங்களாக சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், ஒரு எலுமிச்சை பழத்தின் விலை 50-60 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை | Lemon Prices Have Increased Suddenly In Sri Lanka

மழை இல்லாததால் எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை நாட்டில் முட்டையின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.