
முட்டை விலை தொடர்பில் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று(11) முதல் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி, வெள்ளை முட்டை 18 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 20 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
எனினும், இவ்வாறான விலைக்கு முட்டையை விற்பனை செய்வதன் மூலம் தமக்கு நட்டம் ஏற்படக்கூடும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.