
லொறி ஒன்று தீயில் கருகி நாசம்
ஹோமாகம, ஹபரகட பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருவாடு ஏற்றிச் செல்லப்படும் லொறி ஒன்று தீயில் கருகி நாசமாகியுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியானது முழுவதுமாக தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் உரிமையாளர் தனது வீட்டுக்கு முன்பாக லொறியை நிறுத்திவைத்துவிட்டு உறங்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.