இலங்கையில் முதியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; 200க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு

இலங்கையில் முதியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; 200க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு

நாட்டில் பிள்ளைகளிடம் தம்மை பராமரிக்கக் கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; 200க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு | More Than 200 Elderly People Complain

0707 89 88 89 எனும் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண உதவிச் சேவையை தொடர்புகொள்ள முடியும் என செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் கூறுகிறார்.

முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக பராமரிப்பு சபையொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்களில் இருந்து ஒன்லைன் ஊடாக தொடர்புகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் மேலும் தெரிவித்தார்.