கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

இரத்தினபுரி, கலவானை, வெத்தாகல பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்ட கிணற்றிலிருந்து (11) இன்று பிற்பகல் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

கலவானை, வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதியவர் நேற்று (10) இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட முதியவரின் சடலம் | Body Of Elderly Man Recovered From Wellஇதனையடுத்து முதியவரின் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போது கிணற்றிலிருந்து சடலத்தை கண்டுபிடித்துள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதியவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்