
லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதி பலி
பேலியகொடை - புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டடிய நபர் காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.