பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு

பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு

பொலிஸ் அனுமதி விண்ணப்பம் தொடர்பில் பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி இந்த விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழி முறை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. 

இவ்வாறான சூழலில் இணையவழி முறை நேற்று (10) அதிகாலை முதல் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது.

பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு | Important Notice From Police Sri Lanka

இலங்கை பொலிஸ் தற்போது இந்த செயலிழப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறை சரிசெய்தவுடன், மீண்டும் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.