யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது ; யாருமற்ற வீட்டில் அரங்கேறிய சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது ; யாருமற்ற வீட்டில் அரங்கேறிய சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது ; யாருமற்ற வீட்டில் அரங்கேறிய சம்பவம் | 20 Year Old Woman From Jaffna Arrestedநேற்று (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.