ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.. தீவிர விசாரணையில் பொலிஸார்

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.. தீவிர விசாரணையில் பொலிஸார்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியகம, 91ஆம் கட்டைப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து 65 வயதுடைய ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவமானது, நேற்று மாலை (09) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலநறுவை ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஆரியப்பால (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் நேற்று முன்தினம் (08) மாலை வென்ராசன் புர பளுகஸ் சந்திப் பகுதியில் இருந்து வாத்தியகம 91ஆம் கட்டைப்பகுதிக்கு குளிக்கச் சென்றவர் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.. தீவிர விசாரணையில் பொலிஸார் | Body Recoverd In Kanthalai Sri Lanka Police

குளிக்கச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று முன்தினம் மாலை (08) உறவினர்களால் தேடப்பட்டபோது சடலமாகக் கண்டறியப்பட்டு கந்தளாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார், இச்சம்பவம் கொலையா என்பது குறித்து பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.