
நடந்து சென்ற இளைஞனை மோதிய வாகனம் ; சாரதியை மடக்கிப்பிடித்த மக்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று இரவு நடந்து சென்ற இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்துல் பலத்த காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் நகரவாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.