கடும் மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

கடும் மின்னல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கிழக்கு, ஊவா மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(10) இரவு 11.00 மணி வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,மேலும் 09 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை | Red Alert Issued For 09 Districts Due To Lightning

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.