ஐ.தே.க. உறுப்பினர்களுக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்!

ஐ.தே.க. உறுப்பினர்களுக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சிறிகொத்தவில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சிறிகொத்தவில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த கூட்டத்தை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கிய தீர்மானங்கள் குறித்து இதன் போது அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எந்வொரு ஆசனத்தினையும் கைப்பற்றியிருக்காத நிலையில் குறித்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.