கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு

கொழும்பின் இரு வேறுபட்ட பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிலும் தெஹிவளை பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை கிராண்ட்பாஸில் உள்ள இங்குருகடே சந்திக்கு அருகிலுள்ள ஏரியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரின் உடல் அது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு | 2 Bodies Found In Colombo  

இந்த நபர் சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். கறுப்பு அரை காற்சட்டை மற்றும் கறுப்பு டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை தெஹிவளையில் உள்ள சிறிவர்தன வீதியில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு | 2 Bodies Found In Colombo

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.