மழையுடனான கால நிலை தொடரும் என எதிர்பார்ப்பு!

மழையுடனான கால நிலை தொடரும் என எதிர்பார்ப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழையுடனான கால நிலை தொடரும் என இலங்கை வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை பெய்யும் போது காற்றின் வேகமானது, அதிகரிக்கும் எனவும், இடி மின்னல்களினால் ஏற்படும் தாக்கங்களை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அதிகரிக்கக்கூடிய சாதர்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.