
வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பு சுவரின் மேல் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுக்கும் விதமாக புதிய பாதுபாப்பு வேலியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைசாலையின் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, 15 அடி உயரத்துடன் கூடிய புதிய பாதுகாப்பு வேலியொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்