அமைச்சராகும் தகுதியை பெற்ற 14 பேர்..!

அமைச்சராகும் தகுதியை பெற்ற 14 பேர்..!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் புதிய அரசாங்கத்திடம் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அதன் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முழுமையான அதிகாரத்தை மக்கள் புதிய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும்.

எனவே, அவசியம் ஏற்படின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பலம் புதிய அரசாங்கத்திடம் உள்ளது.

குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் திரிபுபடுத்தப்பட்ட பல விடயங்கள் காணப்படுகின்றன.

செயன்முறை ரீதியாக அவை தெளிவாகியுள்ளன

இந்த நிலையில், அவசியமாயின் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களது கொள்கைக்கு அமைய சரியான தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தடைகள் ஏற்படுமாயின், ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை.

ஏனைய கட்சிகள் வெறுமனே ஒத்துழைப்பை வழங்காது.

எவ்வாறிருப்பினும், அவை முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட முழுமையான சட்ட கட்டமைப்பை அவசியமான முறையில் மறுசீரமைப்பதற்கும், நவீனமயப்படுத்துவதற்குமான பலம், குறைபாடின்றி மக்களினால் புதிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,நடப்பு அரசாங்கத்துடன் இணைந்த சிறி லங்கா சுநத்திர கட்சியிலிருந்து 14 அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட கூடிய வாய்ப்புகள் இரப்பதாக கூறப்பட்டுள்ளது.