அடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்?

அடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்?

நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்து மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைமையகமாகிய சிறிகொத்தாவில் இன்று பகல் ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் எனத் தெரிவித்தார்.