
4 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்
மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் கடந்த 4 வயது சிறுமியை அவரது பாட்டி விட்டு விட்டு வந்தார். பின்னர் பிற்பகலில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தனக்கு சோர்வாக இருப்பதாகவும் உடல் முழுவதும் வலிப்பதாகவும் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, பொலிஸில் புகார் அளித்தனர்.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.