
புத்தளத்தில் உப்பு அறுவடை சாதனை ; உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தளத்தில் சாதனை அளவான உப்பு அறுவடை கிடைத்துள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவு உப்பு அறுவடை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது ஒரு லட்சம் மெட்ரிக் தொன்னை தாண்டும் அளவுக்கு உப்பு உற்பத்தி இருப்பதாக உப்பு விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த கன மழையால், புத்தளம் உப்பு உற்பத்தி முற்றிலுமாக தடைப்பட்டது, உப்புத் வயல் மழை நீரில் மூழ்கி,தொழிலையே முடக்கியுள்ளது.
அந்த காரணத்திற்காக, உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக,நாட்டின் உப்பு நுகர்வோருக்கு தேவையான உப்பு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதேவேளை இலங்கையின் மொத்த உப்புத் தேவை, ஒரு லட்சத்து எண்பதாயிரம் மெட்ரிக் டன்னை நெருங்குகிறது. இதுதான் உணவு மற்றும் பிற பொருட்களுக்குத் தேவையான அளவு என உப்பு விவசாயிகள் தெரிவித்தனர்.