சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு-நிலச்சரிவில் 1400 பேர் பலி (8-8-2010)

சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு-நிலச்சரிவில் 1400 பேர் பலி (8-8-2010)

சீன மக்கள் கடந்த 2010-ம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை எதிர்கொண்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 8-ம் தேதி சுக்கு கவுண்டி மற்றும் கான்சுவில் பெய்த பெருமழையின்போது, மண்சரிவு ஏற்பட்டு 1400க்கும் மேற்பட்டோர் சேற்றில் புதைந்து இறந்தனர். 41 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் மாத கடைசியில் 16.5 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 2.09 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் முற்றிலும் அழிந்தன.

சீன மக்கள் கடந்த 2010-ம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை எதிர்கொண்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 8-ம் தேதி சுக்கு கவுண்டி மற்றும் கான்சுவில் பெய்த பெருமழையின்போது, மண்சரிவு ஏற்பட்டு 1400க்கும் மேற்பட்டோர் சேற்றில் புதைந்து இறந்தனர். 41 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

 


ஆகஸ்ட் மாத கடைசியில் 16.5 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 2.09 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் முற்றிலும் அழிந்தன.

இதேநாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

• 2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏழு விண்வெளி வீரர்களுடன் என்டெவர் ஓடத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாகச் சென்றடைந்தது.

• 1990 - குவைத்தை ஆக்கிரமித்து கைப்பற்றிய ஈராக், அதனை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

• 1963 - இங்கிலாந்தில் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், ரெயில் பயணிகளிடம் இருந்து 2.6 மில்லியன் பவுண்டு பணத்தைக் கொள்ளையடித்தது.

• 1988 - மியான்மரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி போராட்டம் நடைபெற்றது.