மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக, இடைநிறுத்தப்பட்டுள்ள கடவத்தைக்கும், மீரிகமவுக்கும் இடையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் குறித்த பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம் | Central Expressway Construction Work Resumes

அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இந்தப் பகுதியில் கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.