அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை குறைப்பு!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை குறைப்பு!

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை, குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தாக்கத்தால் இந்த வருடப் பரிசுத்தொகை 53.4 மில்லியன் டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 7.6 மில்லியன் டொலர் தொகை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு 3 மில்லியன் டொலர் கிடைக்கும். இது கடந்த வருடத்தை விடவும் 850,000 டொலர் குறைவாகும். எனினும் முதல் சுற்றுக்கான பரிசுத்தொகை கடந்த வருடத்தை விடவும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண இரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.