
பாடசாலை நேரங்களில் கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் வீதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரங்களில் கனரக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெரிசல் நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, அமைச்சின் முடிவை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.