
யாழில் வீட்டு கூரையை சீர் செய்ய முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் வீட்டின் கூரையை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். / இதன்போது கூரை உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (24.08.2025) அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.