ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம்!
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி 11118 வாக்குகளைப் பெற்றுள்ளது இதில் குலசிங்கம் திலிபன் 3203 விருப்பு வாக்குக்களைப் பெற்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டள்ளார்
அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பகுதியில் கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடபட்டமையும் குறிப்பிடத்தக்கது