
கையடக்க தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை - மாணவியின் விபரீத முடிவு
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனையும் பிள்ளையையும் கைவிட்டுச் சென்றுவிட்டார்.
ஒன்பதாவது தரத்தில் கல்வி கற்று வந்த சிறுமி தனது பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அவர் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். அந்த இளைஞன் அவருக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் கிடைத்ததும், மகளை கடுமையாக எச்சரித்ததுடன், கையடக்க தொலைபேசியை உடைத்து எறிந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் எழுதிய கடிதமும் அறையில் கண்டெடுக்கப்பட்டது. மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.