கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : கணவனை தேடி காவல்துறை வலைவீச்சு

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : கணவனை தேடி காவல்துறை வலைவீச்சு

இரத்தினபுரியில் (Ratnapura), தனது மனைவியின் கழுத்தை வெட்டி கணவன் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றைய (07.08.2025) தினம் இடம்பெற்றுள்ளது.

முறையற்ற உறவின் காரணமாக குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 52 வயதுடைய பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஆகும். அவர் இரத்தினபுரி, தெல்வல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : கணவனை தேடி காவல்துறை வலைவீச்சு | Husband Kills Wife By Slitting Her Throat

குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரின் கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து தாகடகதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சந்தேக நபர் தற்போது தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.