
வட்டி தொகை குறைந்தாலும் வைப்புத்தொகையில் அதிகரிப்பு
சந்தை வட்டி விகிதங்களின் சரிவுக்கு ஏற்ப வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் சரிந்துள்ளன.
எனினும், உரிமம் பெற்ற வணிக வங்கித் துறையில் வாடிக்கையாளர் வைப்புத்தொகை 2024 முதல் 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை வேகமாக வளர்ச்சியடைந்தது.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, அரச வணிக வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் இந்த முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டு வணிக வங்கிகள் இந்தக் காலகட்டத்தில் அதிக வைப்புத்தொகையை பெற தவறிவிட்டன.
மத்திய வங்கியின் தகவல்படி, 2025 மார்ச் வரையிலான முதல் காலாண்டில் வைப்பு பொறுப்புகள் 559.2 பில்லியன் ரூபாயால் அதிகரித்து 12,883 பில்லியன் ரூபாய்களாக உயர்ந்திருந்தன.
2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த தொகை 351.3 பில்லியன் ரூபாய்களால் உயர்ந்துள்ளன.