யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

யாழில் (Jaffna) தொடருந்தில் சிக்கி யுவதி ஒருவரின் கால் பறிபோயுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (07) யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால் தொடருந்து புறப்பட ஆரம்பித்துள்ளது.

இதன்போது ஓடும் தொடருந்தில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் தடுக்கி விழுந்ததால் ஒரு கால் தொடருந்தில் சிக்கியுள்ளது.

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம் | Yuvati Stuck In The Train In Jaffna

இதையடுத்து, யுவதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.