இலங்கையில் கடும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கடும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், வெப்பக் குறியீடு - மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை - 'எச்சரிக்கை நிலைக்கு' அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்புறங்களில் வேளைகளில் ஈடுபட்டால் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் வெப்பப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

sri lanka climate

எனவே, முடிந்தவரை அடிக்கடி நிழலை நாடுமாறும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.