மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார். 

நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும், இந்த அறிக்கையை சிலர் திரிபுபடுத்தி முன்வைத்துள்ளதாக நஜித் இந்திககுறிப்பிட்டுள்ளார். 

மின்சாரக் கட்டணக் குறைப்பு, திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் கூறுவது போல்திரிபுபடுத்தி மின் கட்டணத்தைக் குறைப்பது சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். 

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Electricity Bill Reduction In 3 Years

முன்னதாக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்ட ஒரு காலம் இருந்ததாகவும், அதன் கடுமையான தாக்கத்தை மின்சார சபை இன்னும் எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்திடமிருந்து மக்கள் நிலையான மின்சாரக் கட்டணக் குறைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக மேலும் தெரிவித்துள்ளார்.